ETV Bharat / sitara

வெங்கடேஷின் 'நாரப்பா' வெளியாகும் தேதி அறிவிப்பு

author img

By

Published : Jan 29, 2021, 8:14 PM IST

தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்டான 'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'நாரப்பா' வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Venkatesh
Venkatesh

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக கடந்த ஆண்டு வெளியான 'அசுரன்', ரசிகர்களின் பாராட்டைப் பெற்று சூப்பர் ஹிட்டானது. வசூலிலும் கலக்கிய இந்தப் படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக்காக 'நாரப்பா' என்ற பெயரில் உருவாகிவருகிறது. வெங்கடேஷின் 74ஆவது படமாக இப்படம் உருவாகிவருகிறது.

கலைப்புலி தாணு தெலுங்கு பதிப்பையும் தயாரிக்கிறார். இப்படத்தை ஸ்ரீகாந்த் அட்லா இயக்குகிறார். மஞ்சு வாரியர் கேரக்டரில் நடிக்கிறார் பிரியாமணி. கரைப்பல், கையில் அரிவாளுடன் நடிகர் தனுஷ் உக்கிரமான முகத்துடன் நடந்துவரும் தமிழ் 'அசுரன்' பட போஸ்டர் போன்று தெலுங்கிலும் அதே பாணியில் வெங்கடேஷ் கோபத்துடன் நடந்துவரும் போஸ்டரை வெளியிட்டு தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் வெங்கடேஷின் பிறந்தநாளை முன்னிட்டு நாரப்பா கதாபாத்திரத்தின் சிறிய காணொலியைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் தனுஷ் போன்றே வெங்கடேஷும் ஆக்ரோஷத்துடன் கையில் அரிவாளும் தனுஷை போன்ற நடையுடன் வந்தார். பின்னணி இசையும் அசுரன் படத்தின் அதே இசையே இருந்தது.

இந்நிலையில், இப்படம் மே 14ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் படத்தின் ட்ரெய்லர் அல்லது டீசரை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளம் வழியாக கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.