ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் தினமும் புகைப்படங்கள், வீடியோக்கள், த்ரோ பேக் புகைப்படங்கள் எனப் பதிவிட்டு ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகும் சேலஞ்ச்களையும் ஒரு கை பார்த்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமா பிரபலங்களிடையே #BetheREALMEN என்ற சேலஞ்ச் வேகமாகப் பரவி வருகிறது.
முதலில் இந்த சேலஞ்சை பாகுபலி இயக்குநர் ராஜமெளலி செய்து முடிக்க பின் இதை ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு செய்ய சொல்லி பரிந்துரைத்தார். இவரின் இந்த டாஸ்க்கை ஏற்ற ஜூனியர் என்டிஆர் வெற்றிகரமாக செய்து முடிக்க, இவர் தெலுங்கு சினிமாவின் சீனியர்களான சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வெங்கடேஷ் உள்ளிட்டோருக்கு பரிந்துரை செய்தார்.
-
Here's my video @tarak9999.
— Venkatesh Daggubati (@VenkyMama) April 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Let's help our family with domestic work and #BetheREALMAN
I request our Chinnodu @UrsTrulyMahesh, my cobra @IAmVarunTej & @AnilRavipudi to pass it on. pic.twitter.com/ILeH3Cm0Xq
">Here's my video @tarak9999.
— Venkatesh Daggubati (@VenkyMama) April 23, 2020
Let's help our family with domestic work and #BetheREALMAN
I request our Chinnodu @UrsTrulyMahesh, my cobra @IAmVarunTej & @AnilRavipudi to pass it on. pic.twitter.com/ILeH3Cm0XqHere's my video @tarak9999.
— Venkatesh Daggubati (@VenkyMama) April 23, 2020
Let's help our family with domestic work and #BetheREALMAN
I request our Chinnodu @UrsTrulyMahesh, my cobra @IAmVarunTej & @AnilRavipudi to pass it on. pic.twitter.com/ILeH3Cm0Xq
ஜீனியர் என்டிஆரின் சேலஞ்சை ஏற்ற சிரஞ்சீவி, இன்று தனது வீட்டை சுத்தம் செய்து அம்மாவுக்கு தோசை ஊற்றி கொடுக்கும் வீடியோவைப் பதிவிட்டார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி இந்த டாஸ்கை தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இயக்குநர் மணிரத்னத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.
இவர்களையடுத்து வெங்கடேஷ், வீட்டை சுத்தப்படுத்துதல், சமைத்தல் உள்ளிட்ட வேலைகளை முடித்து விட்டு புத்தகம் வாசிப்பது போன்று வீடியோ எடுத்து, தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வெங்கடேஷ் இந்த டாஸ்கை நடிகர்கள் மகேஷ் பாபு, வருண் தேஜ், இயக்குநர் அணில் ரவிப்புடி ஆகியோருக்கு பரிந்துரைத்துள்ளார்.