வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட நாள்களாகக் கிடைப்பில் போடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுவருவதால், ரசிகர்கள் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதி படக்குழுவினர் 'மாநாடு' படத்தின் டீசரை வெளியிட்டனர். இந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு நடைபெற்றுவருகிறது.
அப்போது சிம்பு, சக நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
-
And #maanaadu portions wrapped!! Nearing completion!! Thanks to my team!! #arasu #karthik @dirpitchumani #pazhani @venkatesanraman #vivek @dirsasikumar_p #suresh #directionteam pic.twitter.com/tOmTEhm72t
— venkat prabhu (@vp_offl) April 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">And #maanaadu portions wrapped!! Nearing completion!! Thanks to my team!! #arasu #karthik @dirpitchumani #pazhani @venkatesanraman #vivek @dirsasikumar_p #suresh #directionteam pic.twitter.com/tOmTEhm72t
— venkat prabhu (@vp_offl) April 4, 2021And #maanaadu portions wrapped!! Nearing completion!! Thanks to my team!! #arasu #karthik @dirpitchumani #pazhani @venkatesanraman #vivek @dirsasikumar_p #suresh #directionteam pic.twitter.com/tOmTEhm72t
— venkat prabhu (@vp_offl) April 4, 2021
இந்நிலையில், 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதாகவும் தனது குழுவினருக்கு நன்றி தெரிவித்தும் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.