ஒரே தலைப்பின்கீழ் பல்வேறு இயக்குநர்கள் இணைந்து "ஆந்தாலஜி" திரைப்படத்தை இயக்குவது தற்போது உள்ள காலகட்டத்தில் ட்ரெண்டாகிவிட்டது. அந்தவகையில் ராஜீவ் மேனன், கவுதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், கார்த்திக் சுப்புராஜ், சுதா கொங்கரா ஆகியோர் இயக்கத்தில் சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியான படம் 'புத்தம் புது காலை'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமசர்சனங்களை பெற்றது.
இதனையடுத்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக மணிரத்தனம் தயாரிப்பில், 9 முன்னணி இயக்குநர்கள், 9 முன்னணி ஒளிப்பதிவாளர்கள், 9 முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து 9 நவரசங்களை வைத்து 'நவரசா' என்னும் படத்தை இயக்கிவருகின்றனர். அதே போல் வேல்ஸ் நிறுவனம் 'குட்டி லவ் ஸ்டோரி' என்ற ஆந்தாலஜி படத்தை உருவாக்கி வருகின்றனர்.
-
#TheVictim
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Very true @menongautham sir
But, do you all know what victimized @chimbu_deven @rajeshmdirector @beemji and @vp_offl ? pic.twitter.com/AM15PDWDhP
">#TheVictim
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 1, 2020
Very true @menongautham sir
But, do you all know what victimized @chimbu_deven @rajeshmdirector @beemji and @vp_offl ? pic.twitter.com/AM15PDWDhP#TheVictim
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 1, 2020
Very true @menongautham sir
But, do you all know what victimized @chimbu_deven @rajeshmdirector @beemji and @vp_offl ? pic.twitter.com/AM15PDWDhP
கரோனா ஊரடங்கு காலத்தில் ஆந்தாலஜி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி 'விக்டிம்' என்னும் ஆந்தாலஜி படத்தை தயாரித்துள்ளது.
வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், ராஜேஷ், சிம்பு தேவன் ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளனர். இந்த படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்பது இன்னும் முடிவாகவில்லை. இப்படம் குறித்தான அறிவிப்பை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.