தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு சுமார் 48 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், இயக்குநர், பாடலாசிரியர் எனப் பன்முகத்திறமைக் கொண்டவராக வலம்வருகிறார். இந்நிலையில் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் வரும் 11ஆம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.
இது குறித்து வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் கூறியதாவது, "சிலம்பரசனுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தைக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த விருதுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது.
அவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை செய்யும் பிரபலங்களைக் கவனமாக ஆய்வுசெய்து இறுதிப் பட்டியலை முடிவுசெய்வார்கள். அந்தவகையில் ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதே திரைத் துறையில் நடிக்கவந்தவர் சிலம்பரசன். விரைவில் அவருக்கு 39 வயது ஆகப்போகிறது.
ஒருத்தரோட வயதும், அவரோட கேரியரும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம். அப்படியொரு ஆசிர்வதிக்கப்பட்ட கலைஞன்தான் சிலம்பரசன். நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் எனத் திரைத் துறையில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்துவரும் அவரின் சாதனையைக் கௌரவிப்பதன் பொருட்டே இந்த கௌரவ டாக்டர் என்கிற அங்கீகாரம். அதை எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி" என்றார்.
இதையும் படிங்க: சூர்யா பெயரில் வலம்வரும் பொய்யான கடிதம்