'பிக்பாஸ் சீசன்-3'இல் டைட்டில் வின்னர் முகன், தற்போது 'வேலன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இது இவருக்கு இரண்டாவது படம். கவின் மூர்த்தி இயக்கும், இப்படத்தில் மீனாட்சி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

தற்போது இப்படத்தின் பாடல்கள் டிராக் மிக்ஸிங் நிறைவடைந்ததாகhd படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் வேல்முருகன், பிரியங்கா, சிவாங்கி உள்ளிட்டோர் பாடல் பாடியுள்ளனர். மேலும் இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.