'எனிமி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது, 'வீரமே வாகை சூடும்' திரைப்படத்தில் நடித்துள்ளார். புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 50 நாள்கள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது.
டிம்பிள் ஹயாத்தி, பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். விஷால் ஃபிலிம் பேக்டரி இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர் உள்ளிட்டவை சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இத்திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 'வீரமே வாகை சூடும்' வருகின்ற பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: இராவண கோட்டம் ட்ரெய்லர் வெளியீடு?; சாந்தனு விளக்கம்!