அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார்.
மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான "விஷால் பிலிம் பேக்டரி" மூலம் இத்திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் "வீரமே வாகை சூடும்" திரைப்பட ட்ரெய்லர் இன்று (ஜன.19) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: 'டி - பிளாக்' ட்ரெய்லர் - யூ-ட்யூப் டிரெண்டிங்கில் முதலிடம்!