ETV Bharat / sitara

நகுல் படத்தை புரோமோஷன் செய்த 100 பிரபலங்கள் - latest Nakkhul news

நடிகர் நகுல் நடித்துவரும் ’வாஸ்கோடகாமா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 100 திரைப் பிரபலங்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

நகுல்
நகுல்
author img

By

Published : Sep 11, 2021, 12:33 PM IST

நகுல் நாயகனாக நடிக்கும் ’வாஸ்கோடகாமா’ படத்தை ஆர்.ஜி. கிருஷ்ணன் இயக்குகிறார். 5656 புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், முனிஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியான நேற்று (செப். 10) 100 திரைப் பிரபலங்கள் இணைந்து வெளியிட்டனர்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், பார்த்திபன், ஆர்யா, வெங்கட் பிரபு, பிக்பாஸ் வின்னர் ஆரி, கணேஷ் வெங்கட்ராமன் , நடிகைகள் அதுல்யா ரவி, ப்ரியா பிரகாஷ் வாரியர், இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், இசையமைப்பாளர் டி. இமான், தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன், மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

வாஸ்கோடகாமா
வாஸ்கோடகாமா

இது குறித்து படத்தின் இயக்குநர் ஆர்.ஜி. கிருஷ்ணன் கூறுகையில், "இந்தப் படத்தின் கதாநாயகனின் பாத்திரப் பொருத்தம் கருதியே 'வாஸ்கோடகாமா' பெயரை வைத்தேன். குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான்.

அவன் இன்னும் எதிர்காலத்தில் என்னவாக இருப்பான், அவனது மனநிலை இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப் பின் எப்படி மாறும் என்பதைக் கற்பனை கலந்த ஜாலியான காட்சிகளோடு சொல்லும் படம்தான் 'வாஸ்கோடகாமா'. படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன.

பிக்பாஸ் பிரபலம் சாண்டி படத்தில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். படப்பிடிப்பு சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தீபாவளி ஸ்பெஷல்: ரஜினியுடன் நேருக்கு நேர் மோதும் சிம்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.