ETV Bharat / sitara

இன்னும் எத்தனை உயிர்களை தியாகம் செய்ய? - கொந்தளிக்கும் வரலட்சுமி

இன்னும் எத்தனை உயிர்களை தியாகம் செய்ய வேண்டும் என தெலங்கானா பெண் மருத்துவர் கொலை தொடர்பாக நடிகை வரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.

Varalaxmi Sarathkumar
Varalaxmi Sarathkumar
author img

By

Published : Nov 30, 2019, 9:33 AM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளம் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக எரித்துக்கொன்ற சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் லாரி ஓட்டுநர்கள் இருவர், கிளீனர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. நாட்டையே உலுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், சட்டதிட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

இதனிடையே நடிகை வரலட்சுமி சரத்குமார் பெண் மருத்துவர் கொலை தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'இது மீண்டும் நடந்தேறிவிட்டது. இன்னும் எத்தனை உயிர்களை தியாகம் செய்ய வேண்டுமோ?
இதற்கு நாம் அனைவருமே பொறுப்பு.

  • And its happened again #ripriyanakareddy how many more lives have to be sacrificed? We are all responsible..we live in a world whr animals r more civil thn humans..its every parents duty to teach ur boys to respect women..we r not objects to be used and discarded..#deathpenalty

    — varalaxmi sarathkumar (@varusarath) November 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மிருகங்களை விட கொடிய மனித மிருகங்கள் வாழும் இவ்வுலகில் நாம் வாழ்கிறோம். ஒவ்வொரு ஆண் பிள்ளைகளுக்கும் தங்களது பெற்றோர் பெண்களைப் போற்றக் கற்றுத்தருவது அவசியம். பயன்படுத்திவிட்டு தூக்கி எரிய நாம் ஒன்றும் பொருள் அல்ல. #மரண தண்டனை #deathpenalty' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...

எரிக்கப்பட்ட மற்றொரு பெண்ணின் பிரேதம்: தெலங்கானாவில் சைக்கோ கொலைகாரர்களா?

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.