கரோனா ஊரடங்கு காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வீட்டில் இருக்கும் திரையுலகப் பிரபலங்கள், தாங்கள் அன்றாட செய்யும் வேலைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் நடிகை வரலட்சுமி தனது வளர்ப்பு நாயை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'இவன் தான் என் மகன், குஷி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோவை கண்ட ரசிகர்கள், 'பாகுபலி' படத்தில் ரம்யா கிருஷ்ணன் குழந்தையைத் தூக்கி செல்வது போல், வரலட்சுமி நாயைத் தூக்கி சென்று ராஜமாதா ஆகிவிட்டார் என கமெண்ட் செய்துள்ளனர்.