"போடா போடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இதைத்தொடர்ந்து, பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. கதாநாயகி, வில்லி என பல சவாலான வேடங்களை ஏற்று தனக்கென்று நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ளார்.
கதைகளின் ஹீரோயினாக பல்வேறு படங்களில் நடித்து வரும் வரலெட்சுமி தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ராமசாமி தயாரிக்கும் "கண்ணாமூச்சி" படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பெண் இயக்குநர் இவர்தான்.
கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அரசியல், சமூக ஆர்வலர்கள் மற்றும் திரை உலகைச் சார்ந்த 50 பெண் பிரபலங்கள் ஒரே நேரத்தில் வெளியிட்டு சாதனை படைத்தனர். இயக்குநராக மாறியிருக்கும் வரலட்சுமி சரத்குமாருக்கு திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு