கரோனா தளர்வுகளுக்குப் பிறகு திரைத்துறை பிரபலங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கின்றனர். அந்தவகையில் சரத்குமாரும் அவரது மகள் வரலட்சுமியும் அபிஷேக் பச்சன் குடும்பத்தை சந்தித்துள்ளனர்.
அபிஷேக், ஐஸ்வர்யா ராய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த வரலட்சுமி, புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களது பண்பும் கவனிப்பும் சிறப்பாக இருந்தது. அவர்கள் அன்பில் நெகிழ்ந்துபோனேன். உங்கள் இருவரையும் சந்தித்து, நேரம் செலவழித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது ஐஸ்வர்யா, அபிஷேக். கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்த சந்திப்புக்கான காரணம் எதையும் வரலட்சுமி குறிப்பிடவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: மகேந்திரன் - மௌனத்தை மொழியாக்கியவர்