சென்னை: திருமணம் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் என்று நடிகை வனிதா கூறியுள்ளார்.
நடிகை வனிதா சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தனது திருமணம் பாதியில் முறிந்ததை அடுத்து மூன்றாவதாக பீட்டர் என்பவரை திருமணம் செய்துகொண்டவர், அவரையும் விட்டுப் பிரிந்தார்.
பவர்ஸ்டார் சீனிவாசனுக்கும், வனிதாவிற்கும் திருமணம் என சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. மேலும், அவர்கள் இருவரும் மாலை மாற்றிக்கொள்வது போன்ற புகைப்படங்கள் வைரல் ஆகின. இதனை தொடர்ந்து இன்று இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போதுதான் தெரிந்தது அந்த போட்டோ ஒரு புதிய படத்திற்காக எடுக்கப்பட்டது என்று.
பிக்கப் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் மற்றும் வனிதா இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்தை இயக்குவது மட்டுமின்றி இசை அமைத்தும் உள்ளார் பவர்ஸ்டார். இது இவர் நடிக்கும் 100ஆவது படம்.
திருமணம் எனது தனிப்பட்ட விருப்பம் - வனிதா - திருமணம் என்பது எனது தனிப்பட்ட விருப்பம்
பெண் நடிகர்கள் திருமணம் செய்த பிறகும் நடிக்கிறார்கள். தற்போதுதான் மீண்டும் படங்களில் நடித்து வருகிறேன். பெண்களை இழிவுபடுத்தாதீர்கள். அவர்களை குறைத்து எடை போடாதீர்கள். நான் நாற்பது திருமணம் கூட செய்துகொள்வேன் எனது இஷ்டம் என வனிதா தெரிவித்தார்.

TAGGED:
வனிதா