இயக்குநர் ஹெச். வினோத் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வையை இயக்கிவிட்டு, இப்போது 'வலிமை' என்னும் படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு ஆரம்பித்து நீண்டநாட்களாகியும் 'வலிமை' குறித்த எந்த அப்டேட்டும் வராமல் இருக்கிறது.
இதனால் பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள், வெளிநாட்டு கிரிக்கெட் வீரரில் தொடங்கி உள்ளூர் பூசாரிவரை அனைவரிடமும் 'வலிமை' பட அப்டேட் குறித்து கேட்டுவருகிறார்கள். ஆனால், தயாரிப்பு தரப்போ எதற்கும் அசரவில்லை.
இந்நிலையில், 'வலிமை' படம், உலக அளவிலான தியேட்டர் உரிமை, ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை என அப்படம் 200 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 'ஒருவழியாக இந்த அப்டேட்டாவது வந்ததே' என்று ரசிகர்கள் ஒருபுறம் மகிழ்ச்சியடைந்த நிலையில், படக்குழுவினர் இந்தத் தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரும் என்றும் பத்திரிகையாளர்களிடம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.