தல அஜித் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வலிமை'. பொங்கல் விடுமுறைக்கு வெளியாகவுள்ள இப்படத்தில் வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (நவம்பர் 21) தனது நீண்ட நாள் தோழி லோகிதா ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் இருவரின் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் நடிகர் கார்த்திகேயா திருமணத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, அல்லு அரவிந்த் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகின்றன.
இதையும் படிங்க: மீண்டும் மாநாடுக்கு சிக்கல் - சிம்புவைப் பழிவாங்கும் உதயநிதி?