ETV Bharat / sitara

'மாளிகையின் நிறத்தை மாற்றி, ஒரு பாதியில் கறுப்பைத் தீட்டுங்கள்' - ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழப்புக்காக வைரமுத்து பாடல்

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தைத் தொடர்ந்து நிறவெறிக்கு எதிராகவும் இன பாகுபாட்டுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதில் தனது பங்கை அளிக்கும் பொருட்டு கவிப்பேரரசு வைரமுத்து பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

Vairamuthu writes song lyrics for george floyd
Vairamuthu writes song lyrics for george floyd
author img

By

Published : Jun 11, 2020, 9:50 AM IST

Updated : Jun 11, 2020, 11:05 AM IST

ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரின் கழுத்தில் அமெரிக்க காவலர் ஒருவர் கால்வைத்து அழுத்தியதை அடுத்து அவர் உயிர் இழந்தார். இதைத்தொடர்ந்து பெரும்பான்மையான நாடுகளில் நிறவெறிக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் நிறவெறிக்கு எதிராகவும் கவிஞர் வைரமுத்து பாடல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறுதி வார்த்தைகளான என்னால் மூச்சுவிட முடியவில்லை என்பதை வைத்து இந்தப் பாடலை அவர் எழுதியுள்ளார். அந்த வரிகள் பின்வருமாறு:

'காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்

மூச்சுவிட முடியவில்லை

என் காற்றின் கழுத்தில் - யார்

கால்வைத்து அழுத்துவது?

சுவாசக் குழாயில் – யார்

சுவர் ஒன்றை எழுப்பியது?

காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்

மூச்சுவிட முடியவில்லை

எத்தனை காலம் விலங்குகள் இறுகும்?

எத்தனை காலம் நுரையீரல் நொறுங்கும்?

ஆளைப் பார்த்து மழையும் பெய்யுமா?

தோலைப் பார்த்துக் காற்று வீசுமா?

காக்கையும் உயிரினம்

கருமையும் ஒரு நிறம்

எல்லா மனிதரும் ஒரே தரம்

எண்ணிப்பாரு ஒரு தரம்

மாளிகை நிறத்தை மாற்றுங்கள் - ஒரு

பாதியில் கறுப்பைத் தீட்டுங்கள்

நீங்கள் பகல் நாங்கள் இரவு

இரண்டும் இல்லையேல் காலமே இல்லை

காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்

மூச்சுவிட முடியவில்லை'

கவிஞர் வைரமுத்துவின் பாடல்

ரமேஷ் தமிழ்மணி இசையில் வெளியிடப்பட்ட ‘காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை’ என்ற இந்தப் பாடல் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Last Updated : Jun 11, 2020, 11:05 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.