கவிஞர் வைரமுத்து வரும் ஜுலை 13ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து தனது ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் வாயிலாக பதிவு செய்துள்ளார்.
அதில், "ஜூலை 13 பிறந்தநாள் நீங்கள் நின்ற இடம் நின்று நினைத்தாலே போதும்; உள்ளத்துப் பேரன்பை உள்ளுணர்வு உற்றறியும். ஏழைகளுக்கு முகக் கவசம் வழங்குங்கள். எங்கே போய்விடும் காலம்? அடுத்த ஆண்டு உங்கள் உள்ளங்கை தொட்டு வாழ்த்துக்கள் வாங்குவேன். வாழ்க வையகம் வாழ்க உயிர்க்குலம் வெல்க மானுடம்" எனத் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் கவிஞருக்கு நேரில் சென்று வாழ்த்த முடியாது என்று கவலை தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க... 'மாளிகையின் நிறத்தை மாற்றி, ஒரு பாதியில் கறுப்பைத் தீட்டுங்கள்'