ETV Bharat / sitara

இசையமைப்பாளர் இனியவன் மறைவு - கவிஞர் வைரமுத்து இரங்கல்

இசையமைப்பாளர் இனியவன் மாரடைப்பால் காலமானார் என்ற செய்திஅறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இரங்கல் தெரிவித்த வைரவமுத்து
இரங்கல் தெரிவித்த வைரவமுத்து
author img

By

Published : Oct 25, 2021, 10:25 PM IST

பிரபல இசையமைப்பாளர் இனியவன் கடந்த 23ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர், தனது சிறந்த இசையால் கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகளுக்கு உயிர் கொடுத்தவர்.

இந்நிலையில், அவரது இறப்பிற்கு கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “இசையமைப்பாளர் இனியவன் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மிகச்சிறந்த இசையமைப்பாளர். தஞ்சை மாவட்டத்துக்காரர், தேர்ந்த இயக்குநர்களிடம் இவர் கைகோர்த்திருந்தால் திரை இசையைக் கலக்கியிருப்பார்.

கவுரி மனோகரி படத்தில் கே.ஜே. ஜேசுதாசும் - எஸ்.பி.பியும் இணைந்து பாடிய ‘அருவி கூட ஜதியில்லாமல் சுரங்கள் பாடுது’ பாடல் கேட்டால் இவர் ஆற்றல் புரியும். தலைவர் பிரபாகரனுக்குப் பிடித்த பாடல் அது என்று ஒரு ஈழ நண்பர் என்னிடம் சொன்னார். எனது ‘ஜென்மம் நிறைந்தது’ பாடலுக்கும் இசை இவரே.

ஐந்து நாள்களுக்கு முன்பு கூட பேசினோம். நல்ல உடல் நலனோடு இருந்தார். ‘ஓடங்கள்’ பட இசையமைப்பாளர் சம்பத் செல்வத்திடம் இசை உதவியாளராக இருந்து, அவர் மூலம் தனக்கு அறிமுகம் ஆனவர். நீண்ட கால நண்பர், இவரது உடல் சொந்த ஊரான தஞ்சையில் அடக்கம் செய்யப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த பிரபல தெலுங்கு நடிகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.