ETV Bharat / sitara

'ஆலம்பனா' - வைபவ் நடிப்பில் உருவாகும் அடுத்த பேண்டஸி படம்

author img

By

Published : Nov 5, 2019, 8:25 PM IST

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய பேண்டஸி திரைப்படத்தின் பெயரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

vaibhav

இயக்குநர் பாரி.கே.விஜய் இயக்கத்தில் நடிகர் வைபவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் ஆலம்பனா. இத்திரைப்படம் பேண்டஸி ஜானரில் உருவாகவுள்ளது.

இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக பார்வதி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளி ஷர்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் - தயாரிப்பாளர் சந்துரு இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படத்திற்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்கிறார். முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக உருவாகவிருக்கும் இது, வைபவ் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், அடுத்தாண்டு கோடையில் படத்தை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

Intro:Body:

Vaibhav New movie update

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.