ETV Bharat / sitara

குழந்தைகளை வளர்க்க இதான் சரியான சந்தர்ப்பம்  - வைகைப் புயல் வடிவேலு - கரோனா விழிப்புணர்வு வீடியோ

கடவுள் கொடுத்திருக்கும் சரியான சந்தர்ப்பம் இது. இதை சரியாக பயன்படுத்தி குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கவேண்டும் என வடிவேலு கூறியுள்ளார்.

vadivelu
vadivelu
author img

By

Published : Apr 24, 2020, 12:25 PM IST

கரோனா தொற்று காரணமாக தேசிய ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதிவரை அமலில் இருக்கிறது. இதனையடுத்து கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வடிவேலு தனது சமூகவலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு போர். உலக நாடுகள் அனைத்தும் அணுகுண்டுகள், ஆயுதங்களையெல்லாம் கைவிட்டுவிட வேண்டும். மனிதநேயங்கள் ஒன்று சேர வேண்டும்.

மருத்துவ உலகம் தலையோங்கி நிக்கணும். மருத்துவ உலகமே தற்போது திணறிக் கொண்டிருக்கிறது. மருத்துவர்கள் சொல்வதைக் கேட்டால் போதுமானது. அவர்கள்தான் நமக்கு கடவுள் போன்றவர்கள். வீட்டை தாண்டி நீயும் வரக்கூடாது. நானும் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். அது கோடு, இது வீடு. ரோட்டை தாண்டியும் வரக்கூடாது என்று அரசு சொல்லிவிட்டது.

இந்த காலக்கட்டத்தில் நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்கும் பாடம்தான் அவர்கள் காலம் முழுவதும் மனதில் நிலைத்து நிற்கும். இதுதான் அதற்கான சரியான சந்தர்ப்பம்.

யாருக்கும் கை கொடுக்கக்கூடாது, முத்தம் கொடுக்க வந்தால் அனுமதிக்கக் கூடாது போன்ற பல விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்கள் பிற்காலத்தில் எவ்வளவு பெரிய அதிகாரிகளாக ஆனாலும் அவர்களுக்கு இப்போது சொல்லிக்கொடுக்கும் விஷயம் மனதில் இருக்கும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை கடவுள் வழங்கியுள்ளார். அதை பயன்படுத்தி அவர்களை நல்லபடியாக வளர்த்துவிட வேண்டும்" என்று பேசியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.