கரோனா தொற்று காரணமாக தேசிய ஊரடங்கு மே 3ஆம் தேதிவரை அமலில் இருக்கிறது. இதனையடுத்து கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், அவ்வப்போது சமூக வலைதளப்பக்கத்தில் காணொலி பதிவிடும் வடிவேலு தற்போது புதிய காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், "கடவுள் இப்போது நமக்கெல்லாம் ஒரு பெரிய சோதனை வைத்துள்ளார். அந்தச் சோதனையில் நாம் வெற்றிபெற்றே ஆக வேண்டும். கடவுள் வைத்துள்ள இந்தக் கரோனா பரீட்சை கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் வேறு வழியில்லை. இந்தப் பரீட்சையில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து பாஸ் ஆகியே தீர வேண்டும்.
-
காவல்துறைக்கு ஆதரவளிப்போம் pic.twitter.com/yz5NUP71yI
— Actor Vadivelu (@VadiveluOffl) April 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">காவல்துறைக்கு ஆதரவளிப்போம் pic.twitter.com/yz5NUP71yI
— Actor Vadivelu (@VadiveluOffl) April 27, 2020காவல்துறைக்கு ஆதரவளிப்போம் pic.twitter.com/yz5NUP71yI
— Actor Vadivelu (@VadiveluOffl) April 27, 2020
வீட்டை விட்டு வெளியே சென்றால் காவலர்கள் அடிப்பதாகச் சிலர் கூறுகின்றனர். அவர்கள் வேண்டுமென்றே அடிக்கவில்லை. எங்கே போகிறோம் என்று சரியான காரணத்தை நாம் கூறினால் அடிக்க மாட்டார்கள். சும்மா ஊரைச் சுற்றினால்தான் அடிக்கிறார்கள். இது நம்மை கரோனாவிலிருந்து காப்பற்றுவதற்காகத்தான்.
ஒரு சிலர் காவலர்கள் அடியிலிருந்து தப்பிக்க முதுகில் தட்டை மறைத்துவைத்து சுற்றிவருகின்றனர். இதுபோல் ஏமாற்றி யாரும் வெளியே போக வேண்டாம்.
நாம் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக காவலர்கள் தெருவில் நின்று பணி செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு வீட்டில் இருப்போம்" என்று அறிவுரை வழங்கியுள்ளார்.