மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் படம் ‘நெற்றிக்கண்’. இந்தப் படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன் தொடங்கிய இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தற்போது இதில் ‘வடசென்னை’ புகழ் சரண் சக்தி இணைந்துள்ளார்.
‘ஜில்லா’, ‘சகா’ என சில படங்களில் நடித்திருந்தாலும், ’வடசென்னை’ படத்தில் தனுஷ் மச்சானாக இவர் நடித்தது பலரால் பாராட்டப்பட்டது. இந்நிலையில், நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இவர் முக்கிய வேடமேற்றுள்ளார். இதுகுறித்து சரண் சக்தி, ’இந்தத் திரைப்படம் ஐந்து நபர்களை பற்றிய கதை. அதில் நானும் ஒருவனாக நடித்து வருகிறேன். என்னுடைய கதாபாத்திரம் நயன்தாரா மேடமுடன் இறுதிவரை பயணிக்கும்’ என தெரிவித்துள்ளார்.
‘நெற்றிக்கண்’ படத்தில் முக்கிய கதாபாத்திரம், ‘கேஜிஎப் 2’-இல் இளம்வயது ராக்கி கதாபாத்திரம் என சரண் சக்தி திரைப்பயணம் வேறு தளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: ஒரே ஒரு ஃபோன் கால்தான் - மறுக்காமல் சம்மதம் தெரிவித்த கமல்ஹாசன்!