பவெல் நவகீதன் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லராக சென்ற மாதம் வெளியானது 'வி1 மர்டர் கேஸ்' திரைப்படம். ராம் அருண் கேஸ்ட்ரோ, விஷ்ணு பிரியா, லிஜேஷ், காயத்ரி, மைம் கோபி நடித்த இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இரண்டாவது வாரம் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் இந்தத் திரைப்படம் பல திரையங்குகளில் கூடுதலாகக் காட்சிப்படுத்தப்பட்டுவருகிறது.
தற்போது தமிழ்நாட்டில் இப்படம் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து கேரளாவிலும், கர்நாடகத்திலும் வெளியாகவுள்ளது.
நைக்டோஃபோபியா (Nyctophobia) இருக்கும் கதாநாயகன் ஒரு கொலை சம்பவத்தின் பின்னணியை கண்டுபிடிப்பதை மையமாகவைத்து இப்படம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: சப்பக் டைட்டில் ட்ராக்கை கேட்டு கண்கலங்கிய லஷ்மி: ஆறுதல் கூறிய தீபிகா