ETV Bharat / sitara

செம்மரம் கடத்தும் அல்லு அர்ஜூன்: ’புஷ்பா’ செகண்ட் லுக் - புஷ்பா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகிவரும் 'புஷ்பா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Allu Arjun
Allu Arjun
author img

By

Published : Apr 8, 2020, 10:59 AM IST

Updated : Apr 8, 2020, 11:34 AM IST

திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த படம் ’அலா வைகுந்தபுரம்லோ’ (Ala Vaikunthapurramloo). இதில் தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜனவரி மாதம் வெளியான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் பாடல்களான ‘சாமஜவரகமனா’ (Samajavaragamana), ராமுலோ ராமுலா (Ramuloo Ramulaa), 'புட்ட பொம்மா (Butta Bomma Butta Bomma) உள்ளிட்ட பாடல்கள் சமூகவலைதளங்களில் ட்ரெண்டானது.

இதனையடுத்து அல்லு அர்ஜூன் தற்போது இயக்குநர் சுகுமார் இயக்கும்’ புஷ்பா’ படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான இன்று (ஏப்.8) 'புஷ்பா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அல்லு அர்ஜூன் தனது ட்விட்டர் பக்கத்தில் காலையில் வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து தற்போது தாயரிப்பு நிறுவனம் செகண்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. புஷ்பா ராஜ் என்னும் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கிறார். செகண்ட் லுக் போஸ்டர் மூலம், அல்லு அர்ஜூன் செம்மர கடத்தல் தொழிலாளியாக நடிக்க உள்ளதாக தெரிகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

Last Updated : Apr 8, 2020, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.