சென்னை: பாதுகாப்பு இல்லை எனக் கூறி அடுத்தடுத்து இரண்டு நடிகைகள் தெலுங்கு ஹீரோ படத்தில் நடிக்க மறுத்துள்ளனர்.
தெலுங்கு சினிமா பட்ஜெட் ஹீரோக்களில் ஒருவராகத் திகழ்பவர் கோபிசந்த். தனக்குரிய இமேஜுக்கு ஏற்றவாறு கதைகளை தேர்வு செய்து வழக்கமான தெலுங்கு மசாலாக்களுடன் கூடிய படங்களில் நடித்துவருகிறார். இவர் தமிழில் ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தில் வில்லனாகத் தோன்றினார்.
இந்த நிலையில், தெலுங்கு இயக்குநர் பினு சுப்பிரமணியம் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக கோபிசந்த் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் கதைப்படி பெரும்பகுதி காட்சிகள் காட்டுப் பகுதியில் படமாக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து படத்தில் ஹீரோயினாக நடிக்க படக்குழுவினர் நடிகை ராஷி கண்ணாவை அணுகியுள்ளனர். தொடக்கத்தில் சம்மதம் தெரிவித்த அவர், பின்னர் காட்டுப் பகுதியில் ஷுட்டிங் நடப்பது குறித்து கேட்ட பின்னர் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.
படத்தின் கதை பிடித்திருந்தாலும், டத்தின் முக்கிய காட்சிகள் அடர்ந்த காடுகளில் படமாக்கப்படவுள்ளது. 30 முதல் 40 நாள்கள் வரை காட்டுப் பகுதியில் தங்கி நடிப்பதை பாதுகாப்பாக உணரவில்லை என்று ராஷி கண்ணா கூறியுள்ளார்.
இதே காரணத்துக்காக காஜல் அகர்வாலும் இந்தப் படத்தில் நடிப்பதற்கு மறுத்துள்ளாராம். தற்போது படக்குழுவினர் வேறொரு நடிகையை நடிக்கவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.