ETV Bharat / sitara

அடையாளம் தெரியாத நபர்கள் டாஸ்மாக் கடைக்கு வைத்த தீ!

மதுரை: தபால் தந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடைக்கு நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை
author img

By

Published : May 9, 2020, 10:16 AM IST

ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டதிலும் மதுக்கடைகள் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த இரண்டு நாள்களாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் மது பிரியர்கள், மதுபானக் கடைகளில் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காத காரணத்தினால், ஊரடங்கு முடியும்வரை மதுபானக் கடைகள் திறக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடைக்கு நேற்று இரவு தீ வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த தீ விபத்தில், மதுபானக் கடைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின. உடனே அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பச்சைப்பட்டுடுத்தி கள்ளழகர் அழகர்கோவிலில் எழுந்தருளினார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.