ETV Bharat / sitara

மிஷ்கின் எனக்கு இரண்டு சாய்ஸ் கொடுத்தார் - உதயநிதி

author img

By

Published : Jan 24, 2020, 10:06 PM IST

Updated : Jan 24, 2020, 11:01 PM IST

சைக்கோ திரைப்படத்தில் மிஷ்கின் எனக்கு இரண்டு சாய்ஸ் கொடுத்தார் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Udhayanithi stalin
Udhayanithi stalin

சைக்கோ படம் இன்று வெளியானதையடுத்து அப்படத்தில் நடித்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பிரசாத் லேப்பில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

பத்திரிக்கையாளரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

அப்போது அவர் கூறுகையில், சைக்கோ படத்தின் முதல் காட்சிக்கு மக்களிடம் நல்லவரவேற்பு கிடைத்துள்ளது. எனக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஓப்பனிங் கிடைத்தது. இதுக்கு காரணம் இயக்குநர் மிஷ்கின்தான். ரசிகர்களுடன் சேர்ந்து நான் படம் பார்த்தேன். நான் நினைக்காத இடத்திலெல்லாம்கூட கைதட்டல் கிடைக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த படத்தில் மிஷ்கின் எனக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுத்தார். ஒன்று சைக்கோவாக நடிப்பது. மற்றொன்று கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடிப்பது. நான் கண் தெரியாதவன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தேன். நடிகர் சங்கம் தேர்தல் வழக்கின் நீதிமன்ற தீர்ப்பு குறித்து தெரியாது. மீண்டும் தேர்தல் நடந்த முடிவு செய்தால் அதன் முடிவுகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தேர்தலை நடத்தவே வேண்டாம் என்றார்.

இதையும் வாசிங்க: தந்தை புத்தகத்துக்கு எழுந்த விமர்சனங்களை நினைவுபடுத்திய அமிதாப்

Intro:நடிகர் சங்க தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றால் தேர்தல் நடத்தவும் இல்லை என்றால் தேர்தலை நிறுத்தவும் - நடிகர் உதயநிதி ஸ்டாலின் Body:இதுகுறித்து சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியாகியுள்ள சைக்கோ படம் குறித்து பேசினார் அப்போது,

படம் காலை எட்டு மணி சிறப்பு காட்சி திரையிடப்பட்டது எனக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஓப்பனிங் கிடைத்தது மிஸ்கின் சாருக்கு போய் சேரும். சத்யம் திரையரங்கில் ஆடியன்ஸ் கூட படம் பார்த்தேன். படத்தை ரசிக்கிறார்கள் நாங்கள் நினைக்காத இடத்திலெல்லாம் கைத்தட்டல் வருகிறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த படத்தின் வெற்றி இயக்குனர் மிஷ்கினும் தயாரிப்பாளருக்கும் சேரும்.

படம் ஒரு சைக்கோ குறித்த கதை சைக்கோவா ஒரு கதாப்பாத்திரம் எதற்கு மாறியது அதற்கு சமூகமும் ஒரு பொறுப்பு அதுமட்டுமல்லாமல் பெண்களின் பாதுகாப்பு குறித்து இந்தபடத்தில் பேசப்பட்டுள்ளது இயக்குனர் மிஷ்கினுக்கு என்று ரசிகர்கள் உள்ளார்கள் அவருடைய படங்கள் எப்போதும் பேசப்படும் இந்த சைக்கோ படம் அவரின் படங்களில் ஒரு பெஸ்ட் படமாக இருக்கும்.

இந்த படத்தின் கதையை நான் தேர்வு செய்வதற்கு கதாநாயகன் பார்வையற்றவராக வருகிறார். ஒரு சவாலான கதாபாத்திரமாக இருக்கும் என்று நினைத்து நான் நடித்து இறுதியாக வந்த இரண்டு மூன்று படங்கள் நடனமாடி பஞ்ச் டயலாக் பேசி அது போன்று இருக்கும் இந்தப் படம் அது போன்று இல்லாமல் வித்தியாசமான பாத்திரங்களை இப்போது நான் தேர்வு செய்து செய்கிறேன் அதுபோன்ற ஒரு கதாபாத்திரம் தான் இந்த சைக்கோ படத்திலும் அமைந்தது அவர் எனக்கு 2 சாய்ஸ் கொடுத்தார் ஒன்று கதாநாயகனாக நடிப்பது மற்றொரு வில்லனாக நடிப்பது நான் கதாநாயகனாய் தேர்வு செய்து நடித்தேன். தெரியாத கதாபாத்திரத்தில் நடித்த தான் படம் முழுவதும் லென்ஸ் போட்டு நடித்தேன் மட்டுமல்லாமல் இயக்குனர் மிஷ்கினின் நண்பர் பார்வையற்றவர் அவருடன் இரண்டு நாட்களுக்கு இருந்து அவர்களின் பாடி லாங்குவேஜ் குறித்து தெரிந்து கொண்டேன்.

மனிதன் படத்துக்குப் பிறகு நான் நடிக்கும் படங்கள் கதையம்சம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே படத்திலும் இப்படியான கதையை தேர்வு செய்து நடித்து வருகிறேன். அசுரன் போன்ற மண் சார்ந்த கதைகளில் நடிக்கவும் விருப்பம் உள்ளது அதுபோன்ற கதைகளுக்காக காத்திருக்கிறேன்

Conclusion:நடிகர் சங்கம் தேர்தல் வழக்கின் நீதிமன்ற தீர்ப்பு ரத்து என்பது எனக்கு தெரியது
மீண்டும் தேர்தல் நடந்த முடிவு செய்தால் அதன் முடிவுகள் தெரிவிக்கின்ற மாதிரி இருந்தால் தேர்தல் நடத்தவும் இல்லை என்றால் தேர்தலை நடத்தவே வேண்டாம்

Last Updated : Jan 24, 2020, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.