ETV Bharat / sitara

தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க மாட்டேன் - உதயநிதி ஸ்டாலின் - இரவுக்கு ஆயிரம் கண்கள்

கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பற்றிய புதிய தகவல்களை நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்திருக்கிறார்.

Udhayanidhi Stalin
Udhayanidhi Stalin
author img

By

Published : Jan 25, 2020, 3:06 PM IST

பயோ பிக் எனப்படும் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் திரையுலகில் அதிக வரவேற்பை பெற்றுவருகின்றன. அந்த வகையில், நடிகை சாவித்ரி, பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்டிஆர், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோரது படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

தற்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஏ.எல்.விஜய் 'தலைவி' என்ற பெயரில் இயக்கி வருகிறார். அதேபோல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'குயின்' என்ற இணையத் தொடராக கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.

இதனிடையே மறைந்த திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தை எடுக்க பல முன்னணி இயக்குநர்களும் தயாராகிவருகின்றனர். ஏற்கனவே கருணாநிதி கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்திருந்தார்.

Karunanidhi's Biopic
கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி

இந்த நிலையில், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தை நிச்சயம் எடுப்பேன் என அவரது பேரனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 'தனது தாத்தாவின் வரலாற்றுப்படத்தை எடுக்க பலர் தங்களைத் தொடர்புகொண்டனர். அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. அதில் நடிக்கும் நடிகர்கள் குறித்து நான் முடிவு செய்ய முடியாது. எனது தந்தையும், அந்தப்படத்தை இயக்கப் போகும் இயக்குநருமே அதனை தீர்மானிப்பார்கள். அந்தப்படத்தில் நான் நடிக்க மாட்டேன்' என தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே உதயநிதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் நேற்று சைக்கோ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள உதயநிதியின் திரைப்பயணத்தில் இந்தப்படம் ஒரு மைல்கல்லாக அமையும் என சினிமா விமர்சகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Udhayanidhi Stalin
உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி தற்போது 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குநர் மு.மாறன் இயக்கும் 'கண்ணை நம்பாதே' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், 'தடம்' படத்தின் இயக்குநர் மகிழ் திருமேணி இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப்புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

விஜய் சேதுபதியை புகழந்து கவிதை எழுதிய பிரபல இயக்குநர்!

Intro:Body:

Udhayanidhi Stalin on Karunanidhi's Biopic

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.