சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி, உதயநிதி இணைந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் கரோனா சூழல் காரணமாகவும், தேர்தல் காரணமாகவும் உதயநிதி, மகிழ் திருமேனி இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது இந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
உதயநிதி படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ‘ஈஸ்வரன்’ பட நாயகி நிதி அகர்வால் நடிக்கிறார். அரோல் கரோலி இசையமைக்க; மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதுகிறார்.
சென்னையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்படுகிறது. எனினும், தமிழ்நாட்டின் வேறு சில இடங்களிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு அருண்ராஜா காமராஜ் இயக்கும் ‘ஆர்டிகல் 15’ ரீமேக்கில் உதயநிதி கலந்துகொள்ள இருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மேற்கு வங்கம் செல்கிறார் ரஜினி!