'ராஜா ராணி' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர், அருண்ராஜா காமராஜ். தனது முதல் படத்திலேயே தனிக்கவனம் பெற்றார். இவர் நடிப்பு மட்டுமின்றி 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'காக்கிசட்டை', 'தெறி', 'கபாலி', 'காலா', 'மாஸ்டர்', 'தர்பார்' போன்ற பல படங்களில் பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக 'கபாலி' படத்தின் தீம் பாடலான 'நெருப்புடா' பாடல், இவர் எழுதி பாடியதையடுத்து ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார்.
தமிழ் சினிமாவில் அருண்ராஜா காமராஜ் நடிகராக, பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் தன்மையுடன் வலம் வந்த இவர், ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து 'கனா' என்னும் படத்தை இயக்கியதின் மூலம் இயக்குநராகவும் தற்போது வலம் வருகிறார். அருண்ராஜா காமராஜ் தற்போது உதயநிதியை வைத்து 'ஆர்டிகிள் 15' என்னும் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கும் பணியில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கரோனா தொற்று காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு (மே.16) உயிரிழந்தார். இவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
நேர்த்தியான இயக்குனர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் @Arunrajakamaraj அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/YUvMpwQCSb
— Udhay (@Udhaystalin) May 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">நேர்த்தியான இயக்குனர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் @Arunrajakamaraj அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/YUvMpwQCSb
— Udhay (@Udhaystalin) May 17, 2021நேர்த்தியான இயக்குனர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் @Arunrajakamaraj அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/YUvMpwQCSb
— Udhay (@Udhaystalin) May 17, 2021
அந்தவகையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், சிந்துஜாவின் இறுதிச் சடங்கில் நேரடியாக கலந்துகொண்டு அருண்ராஜா காமராஜிற்கு ஆறுதல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேர்த்தியான இயக்குநர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் அருண் காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்" எனப் பதிவிட்டுள்ளார்.