பாலிவுட் நடிகை பாயல், கடந்த சில நாள்களாக சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் ஆவேசமாக பதிவு வெளியிட்டு வந்தார். அவரது பதிவிட்ட கருத்துக்கள் அனைத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.
தொடர்ந்து அவரது பதிவுகள் குறித்து புகார்கள் வந்ததால், ட்விட்டர் நிறுவனம் அவரின் கணக்கை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "ட்விட்டர் இந்தியா நிறுவனம் எதற்காக எனது கணக்கை சஸ்பெண்ட் செய்தது என்று தெரியவில்லை. நான் உண்மையை தான் பேசினேன். மக்களுக்கு எதிராகவும், சமூகத்திற்கு எதிராகவும், எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அப்படியிருக்கும் சூழலில் ட்விட்டர் இந்தியா ஏன் எனது ட்விட்டர் கணக்கை சஸ்பெண்ட் செய்தது. இதுகுறித்து மக்கள் எனக்காக குரல் கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.