ETV Bharat / sitara

ரசிகர்களுக்கு அதிரடி ஷாக் கொடுத்த திரிஷா...! - ராங்கி

நல்ல கதைகளுடன் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்துவரும் திரிஷா தற்போது நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராங்கி' திரிஷா
author img

By

Published : Apr 20, 2019, 5:43 PM IST

Updated : Apr 20, 2019, 5:58 PM IST

'96' படத்தில் ஜானுவாக நடித்து மனம் உருக உருக காதலித்து ரசிகர்களை காதல் மழையில் நனைய வைத்தவர் திரிஷா. இப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்துக்கு ஜோடியாக 'பேட்ட' படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் சிறிய வேடமாக இருந்தாலும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு அவருக்கு நிறைவேறியது. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய எம்.சரவணன் திரிஷா நடிக்க இருக்கும் புதிய படத்தை இயக்குகிறார். லைகா புரொடொக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். பெண்ணை மையப்படுத்தி உருவாகும் இப்படத்திற்கு 'ராங்கி' என பெயரிட்டுள்ளனர்.

'ராங்கி' படத்தில் சத்யா இசையமைக்கிறார். 'ஐந்து ஐந்து ஐந்து', 'வலியவன்' ஆகிய படங்களுக்கு எடிட்டிங் செய்த சுபாரக் இப்படத்திற்கு எடிட்டிங் செய்கிறார்.

மேலும், தமிழ் சினிமாவில் பெண்ணாக நிலைத்து நிற்பது கடினம் அந்த வகையில், நடிகை திரிஷா பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வரும் புதிய கதைகளை தேர்ந்தெடுத்து சவாலாக ஏற்று நடித்துவருகிறார். இந்நிலையில், ராங்கி படத்தின் முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

trisha acting raangi
'ராங்கி' திரிஷா

#Trisha's new movie's title is #Raangi 
#EngeyumEpothum fame #Saravanan will be directing the film! 
Director #ARMurugadoss has written story and dialogues
Produced by #LycaProductions

@trishtrashers
@ARMurugadoss
@LycaProductions
Last Updated : Apr 20, 2019, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.