நடிகை த்ரிஷாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து கிட்டதட்ட இரண்டு வருடமாகியுள்ளது. இதனையடுத்து இத்திரைப்படம், வரும் 14ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.
இதனையொட்டி படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் ப்ரோமோஷன் செய்ய வேண்டும் என படக்குழு அழைத்துள்ளனர். ஆனால் அதற்கு த்ரிஷா, “நயன்தாராவும் தான் எந்தப் படத்தோட ப்ரமோஷனுக்கும் வருவதில்லை.
நீங்க அவங்களை ஏனென்று கேட்டிருக்கிறீர்களா. அப்புறம் ஏன் என்னை மட்டும் கேக்குறீங்க?. இந்தப் பட ப்ரோமோஷனுக்கு நான் வர மாட்டேன் என்று சொல்லிவிட்டதாகக் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: மாஸ்க் அணியாமல் கொச்சின் சென்ற நயன்தாரா