ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் (லாலேட்டன்) முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்த திரைப்படம் ‘திரிஷ்யம்’. 2013ஆம் ஆண்டு வெளியான இந்த திரில்லர் திரைப்படம், மாபெரும் வெற்றிபெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜீத்து ஜோசப் - மோகன்லால் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கவுள்ளனர். இதில் மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார்.
நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘ஹேய் ஜுட்’ திரைப்படம்தான் த்ரிஷாவுக்கு மலையாளத்தில் முதல் படமாகும். தற்போது மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்து தன் இரண்டாவது நேரடி மலையாள திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு கேரளா, டெல்லி, கனடா, கெய்ரோ மற்றம் லண்டன் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்படவுள்ளது.
ஜீத்து ஜோசப் தற்போது கார்த்தி, ஜோதிகா, நிகிலா விமல் உள்ளிட்டோரை வைத்து இயக்கியுள்ள புதிய படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.