ETV Bharat / sitara

’ஓடிடி வெளியீட்டை மறுத்துவிட்டோம்’ - சுல்தான் பட தயாரிப்பாளர்

சென்னை: சுல்தான் திரைப்படம் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம் என்பதால் ஓடிடி வெளியீட்டை மறுத்துவிட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தெரிவித்துள்ளார்.

சுல்தான்
சுல்தான்
author img

By

Published : Mar 24, 2021, 3:40 PM IST

ட்ரீம் வாரியர் பிக்ஷர்ஸ் எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், கே.ஜி.எஃப். வில்லன் ராமச்சந்திர ராஜு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (மார்ச் 24) நடைபெற்றது.

இதில் கார்த்தி, ராஷ்மிகா, இயக்குநர் பாக்யராஜ் கண்ணன், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய எஸ்.ஆர். பிரபு, “சுல்தான், பாகுபலி போன்ற பிரமாண்டமான படம், இரண்டு பார்ட் எடுக்க வேண்டிய படம். ஆனால் பட்ஜெட் காரணமாக அதற்குத் தகுந்த மாதிரி கதையை மாற்றிச் சுருக்கி எடுக்க முடிந்தது.

கரோனா காரணமாகப் படத்தைத் திரையில் கொண்டுவர மிகவும் சிரமப்பட்டோம். ஓடிடியில் வாங்கி வெளியிட மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனம் முன்வந்தது. நாங்களும் வேறு வழியின்றி சம்மதித்துவிட்டோம். ஆனால் மனம் கேட்கவில்லை.

இந்தப் படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாக வேண்டும் என்று சொன்னதும், அவர்களும் புரிந்துகொண்டனர். மிகுந்த சிரமங்களுக்கு இடையே வரும் ஏப்ரல் 2ஆம் தேதி படம் தமிழ், தெலுங்கு மொழி திரையரங்குகளில் வெளியாகிறது” என்று கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.