ETV Bharat / sitara

ஒரே தலைப்பு! - தெலுங்கு ஹீரோவுடன் மோதும் சிவகார்த்திகேயன் - சிவகார்த்திகேயன் - பிஎஸ் மித்ரன் திரைப்படம்

சென்னை: ஒரே தலைப்பால் சிவகார்த்திகேயன் - விஜய் தேவரகொண்டா நடித்துவரும் புதிய படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒரே தலைப்பு! தெலுங்கு ஹீரோவுடன் மோதும் சிவகார்த்திகேயன்
author img

By

Published : Oct 2, 2019, 3:27 PM IST

கடந்த வாரம் வெளியான 'நம்ம வீட்டுப் பிள்ளை' ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வெற்றிகரமாக ஓடிவருவதால் குஷியில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இதையடுத்து அவர் தற்போது இரும்புத்திரை புகழ் பி.எஸ். மித்ரன் இயக்கும் புதிய படத்தில் நடித்துவருகிறார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். நடிகர் அர்ஜுன், இந்தி நடிகர் அபய் தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஹீரோ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயனை போல் தெலுங்கில் இளைஞர்களால் கொண்டாடப்படும் ஹீரோவாகத் திகழும் விஜய் தேவரகொண்டா - பேட்ட புகழ் மாளவிகா மோகனன் ஆகியோர் ஜோடியாக நடித்துவரும் படத்துக்கு ஹீரோ எனத் தலைப்பு வைக்க படத் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்தத் தலைப்பை படத்தை தயாரித்துவரும் டிரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன் விஜய் தேவரகொண்டா படத்தை ஐந்து மொழிகளில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனராம். இதைத்தொடர்ந்து இந்த டைட்டில் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தை விஜய் தேவரகொண்டா பட நிறுவனம் அணுகியுள்ளது. இதையடுத்து, எதிர்பாராமல் டைட்டில் விவகாரத்தில் தவறு நிகழ்ந்திருக்கிறது எனவும், முன்னரே அந்தத் தலைப்பை பதிவு செய்திருப்பதால் சிவகார்த்திகேயன் படத்துக்கு வேறொரு தலைப்பு வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Intro:Body:

ஒரே தலைப்பு - தெலுங்கு ஹீரோவுடன் மோதும் சிவகார்த்திகேயன்

தமிழ் நல்ல கமர்ஷியல் மதிப்பு பெற்ற ஹீரோவாகவும், தெலுங்கில் அதே நிலைமையில் இருக்கும் விஜய் தேவரகொண்டாவும் படத்தின் தலைப்புக்காக மோதிக்கொள்வது தெரியவந்துள்ளது.  

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.