நடப்பு ஆண்டின் இறுதியில் தொடர்ச்சியாக ஏராளமான படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கான காரணம் குறித்து தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசுகையில், “ஒவ்வொரு ஆண்டும் ஆண்டின் இறுதி மாதத்தில் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் மொத்தமாக வெளியிடுவது வாடிக்கையாக உள்ளது.
இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் முற்றிலுமாக பல மாதங்கள் மூடப்பட்டன. இதனால் சிறிய முதலீட்டு படங்கள் திரையரங்குகளில் வெளியிட முடியாமல் தேங்கின.
அடுத்த வருட தொடக்கத்தில் அஜித்குமார் நடித்த வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பெரிய படங்கள் வெளியாக உள்ளது. இதனால் சிறிய படங்களுக்கு திரையரங்கு கிடைப்பது சிரமம் என்பதன் காரணமாகவே, இந்த வாரம் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. இதனால் யாருக்கும் எந்தவித பயனும் இல்லை” என்றார்.
இதையும் படிங்க: 'ஜான்வி முதல் சமந்தா வரை'; டூ பீஸில் கலக்கும் நாயகிகள்!