ETV Bharat / sitara

மிஸ் தமிழ்நாடு உயிருக்கு ஆபத்து!..

சென்னை: மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற மீரா மிதுன் தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டி தமிழ்நாடு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

meera
author img

By

Published : May 30, 2019, 6:56 PM IST

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மிஸ் தமிழ்நாடு போட்டியில் பட்டம் பெற்றவர் மீரா மிதுன். இவர், ’தானா சேர்ந்த கூட்டம்’ , ‘8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டி மீரா மிதுன் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

மீரா மிதுன் புகார்

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் மாடலிங் துறையில் தொடர்ந்து இயங்கி வருகிறேன். மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் பெற்று சாதித்த முதல் தமிழ் பெண்மணி நான். இதனால் தமிழ் பெண்கள் மாடலிங் துறையில் சாதிக்க மிஸ் தமிழ்நாடு திவா 2019 என்ற பெயரில் அழகிப்போட்டியை நடத்த திட்டமிட்டிருந்தேன்.ஏற்கனவே மாடலிங் ஏஜென்ஸி நடத்தி வரும் அஜித் ரவி என்பவர் தொழில் போட்டி காரணமாகவும், தமிழ் பெண்கள் சாதிக்கக்கூடாது என்பதற்காகவும் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தும்,தகாத வார்த்தைகள் பேசியும்வருகிறார்.

நான் இந்தப் போட்டியை நடத்தினால், தமிழ்ப் பெண்கள் சர்வதேச அளவில் சாதிக்க இது வழிவகை செய்யும். வருகிற ஜூன் 3ஆம் தேதி இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த அழகி போட்டியில் தமிழ் பெண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இதில் கலந்துகொள்ளும் 14 பெண்களுக்கும் போட்டியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என மிரட்டல் வருகிறது. இதனால் எனக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.

தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டி மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்ற பெண்மணி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரப்பரப்பு புகார்..

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மிஸ் தமிழ்நாடு சவுத் அழகிப்போட்டியில் பட்டம் பெற்றவர் மீரா மிதுன்.இவர் தானா சேர்ந்த கூட்டம் ,8 தோட்டாக்கள் போன்ற பல்வேறு படங்களிலும் துணை நடிகையாக நடித்து உள்ளார்.இந்நிலையில் தனது உயிருக்கு  பாதுகாப்பு வேண்டி மீரா மிதுன் காவல் ஆணையரிடம் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது  தமிழ்நாட்டில் மாடலிங் மற்றும் மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் பெற்று சாதித்த முதல் பெண்மணி என்ற பெருமையை தேடி தந்ததாகவும்,இதனால் தமிழ் பெண்கள் மாடலிங் துறையில் சாதிக்க மிஸ் தமிழ்நாடு தீவா 2019 என்ற பெயரில் அழகிப்போட்டியை நடத்த தான் திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால் தமிழ் பெண்கள் சாதித்து விடக்கூடாது என்பதற்காக ஏற்கெனவே மாடலிங் துறை நடத்தி வரும் அஜித் ரவி என்பவர் தொழில் போட்டி காரணமாகவும்,தமிழ் பெண்கள் சாதிக்ககூடாது என்பதற்காகவும் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தும்,தகாத வார்த்தைகளால் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் அழகி போட்டிக்கு  வேறு நாட்டிலோ அல்லது மாநிலத்திலோ சென்று கலந்து கொண்டு பட்டம் பெற்று தருவதால் அந்த நாட்டிற்கு மட்டுமே பெருமை சென்றுவிடுவதாகவும்,இதனால் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பெருமையும் வருவதில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.

இதனால் வரும் 3ஆம் தேதி தான் நடத்தவிருக்கும் அழகிப் போட்டியில் தமிழ் பெண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.ஆனால் கலந்து கொள்ளும்  14 பெண்களுக்கும்  போட்டியில் இருந்து விலகி கொள் என்று மிரட்டல் போன்கால்  வருவதாகவும் கூறினார்.

இதனால் தனக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.