மனித உரிமைகளையும், வாழ்வியலையும், மக்கள் பிரச்சனைகளயும் வெளிப்படையாகப் பேசும், "தெருக்குரல்" ஆல்பத்தை, பாடகர் அறிவின் வரிகளில் தனியிசைக் கலைஞர், இசையமைப்பாளர் ஆஃப்ரோ இசையில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் 'தி கேஸ்ட்லஸ் கலெக்டிவ் வெளியிட்டுள்ளது.
அதில்
"என்னா நான் உனக்கு Anti Indian Ah??
Bore அடிக்குது போராடலாம் வாங்க தோழர்.
" நீ என்பது ஓட்டு மட்டுமே,"
என் திமிரான தமிழச்சியே".
என சமீபத்திய நிகழ்வுகள் அத்தனையும் பாடி உள்ள இந்த ராப் ஆல்பம் இசைப்பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்பாடலை இசையமைப்பாளர் டென்மா, மலேசிய ராப் கலைஞர் ரோஷன் ஜாம்ராக் ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர்.
ஹிப்ஹாப் வரலாற்றிலேயே இந்த ஆல்பம் பெஸ்ட் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.