சென்னை : தேங்காய் சீனிவாசன், சென்னையைச் சேர்ந்த ராஜவேல் முதலியார் என்பவருக்கும், தூத்துக்குடியிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சுப்பம்மாள் என்பவருக்கும் மகனாக 1937ஆம் ஆண்டு பிறந்தார்.
காமெடி நடிகர் தேங்காய் சீனிவாசனின் நடிப்பு பசிக்கு முதலில் தீனி போட்டது அவருடைய அப்பா தான். அப்பாவின் கலாட்டா கல்யாணம் என்ற நாடகம் மூலமாக தான் தேங்காய் சீனிவாசன் நடிக்க ஆரம்பித்தார்.
தேங்காய் சீனிவாசன் பெயர் காரணம்
இவர், ஒரு விரல் திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.
ஆரம்பத்தில் சீனிவாசன் என்று அழைக்கப்பட்டு வந்தவர் தேங்காய் சீனிவாசன் ஆனதற்கு பின்னால் கதை ஒன்று உள்ளது. அதாவது ‘கல் மணம்’ என்ற நாடகம் ஒன்றில் தேங்காய் விற்கும் பையனாக நடித்த சீனிவாசனின் கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்துப் போனது. அந்த நாடகத்தை பார்க்க வந்த திரைப்பிரபலம் டணால் தங்கவேலு அவருக்கு தேங்காய் சீனிவாசன் என பட்டப்பெயர் கொடுத்தார்.
கிருஷ்ணன் வந்தான்
காமெடியன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், சிவாஜி கணேசன் நடித்த கிருஷ்ணன் வந்தான் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
டணால் தங்கவேலு, நாகேஷ், என்.எஸ்.கே., சந்திரபாபு கொடிகட்டி ஆண்ட திரையுலகில் தனக்கென தனி பாணியையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்திருந்தார் தேங்காய் சீனிவாசன்.
இதையும் படிங்க : இளங்காற்து வீசுதே.. ஹேப்பி பர்த் டே சங்கீதா!