கரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாத இறுதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டன.
இதனையடுத்து தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததையடுத்து படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அந்தவகையில், சினிமா படப்பிடிப்புகள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்காததால், பெரிய கதாநாயகர்களின் படங்கள் வெளியிட முடியாமல் படத்தின் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.
இதனையொட்டி திரையரங்கு உரிமையாளர்கள் நாளை (ஜூலை 8) முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது, திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும், உள்ளூர் வரி, சொத்து வரி உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கரோனா நிவாரண நிதி வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகர் நாசர் நன்றி!