ETV Bharat / sitara

ஜோக்கர் நடிகரின் 'டாப்லெஸ்' வெப் சீரிஸ் - போஸ்டர் வெளியீடு - ஆரண்யகாண்டம்

'ஜோக்கர்' பட நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'டாப்லெஸ்' வெப் சீரிஸின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

TOPLESS ZEE WEB SERIES
TOPLESS ZEE WEB SERIES
author img

By

Published : Dec 16, 2019, 10:30 AM IST

'ஆரண்ய காண்டம்' திரைப்படம் மூலம் குணச்சித்திர நடிகராக அறிமுகமானவர் குரு சோமசுந்தரம். கடல், பாண்டியநாடு, ஜிகர்தண்டா, ஜோக்கர், வஞ்சகர் உலகம், பேட்ட உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், 'ஜோக்கர்' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து சமூக அவலங்களை மக்களுக்கு, சாட்டையடி கொடுக்கும் வண்ணம் இவர் நடித்த நடிப்பு 'ஜோக்கர்' படத்தில் பெரிதாகப் பேசப்பட்டது.

தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரமாகவே தன்னை அடையாளப்படுத்தி திரையில் தோன்றி நடிக்கும் குரு சோமசுந்தரம், மாறுபட்ட நடிப்பால் தமிழ்த் திரையுலகில் தடம் பதித்துள்ளார்.

guru-somasundaram
குரு சோமசுந்தரம்

தற்போது இவர், 'டாப்லெஸ்' என்ற வெப் சீரிஸில் நடித்துவருகிறார். தினேஷ் மோகன் இயக்கும் இந்த வெப் சீரிஸை சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இதில், ஹரீஷ் உத்தமன், அருண் அலெக்சாண்டர், கோகுல் ஆனந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கொள்ளைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த வெப் சீரிஸ், ZEE5 வலை தளத்தில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

TOPLESS ZEE WEB SERIES
'டாப்லெஸ்' வெப் சீரிஸ்

ஏற்கெனவே இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரத்தக்கறை படிந்த மேல்சட்டை அணிந்து, நரைத்த தாடியுடன் குரு சோம சுந்தரத்தின் மிரட்டும் வகையிலான போஸ்டர் 'டாப்லெஸ்' மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இதையும் படிங்க...

அக்கா - தம்பி பாசம் பகிரும் 'தம்பி': கார்த்தியின் அனுபவம்

Intro:Body:

TOPLESS ZEE WEB SERIES

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.