ETV Bharat / sitara

விசு என்ற ஆளுமை! - தொலைக்காட்சி சேனல்கள்

திரைப்படத் துறை, தொலைக்காட்சி சேனல்கள் என அனைத்திலும் தன்னை ஒரு ஆளுமையாக நிரூபித்துக்காட்டிய விசுவுக்கு இன்று முதலாமாண்டு நினைவு தினம்

விசு என்ற ஆளுமை!
விசு என்ற ஆளுமை!
author img

By

Published : Mar 22, 2021, 4:03 PM IST

நடிகராக, இயக்குநராக, கதாசிரியராக, வசனகர்த்தாவாக நாம் விசுவை பல படங்களில் பார்த்திருக்கிறோம், மகிழ்ந்திருக்கிறோம், நெகிழ்ந்திருக்கிறோம். ஏன் அழக்கூட செய்திருக்கிறோம். குறிப்பாக தேசிய விருது வாங்கிய ”சம்சாரம் அது மின்சாரம்’’ என்ற படம் இன்றளவும் அனைவரும் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது.

வெள்ளித் திரையில் மட்டுமின்றி தொலைக்காட்சிகளிலும் அவர் கோலோச்சினார். விசுவின் அரட்டை அரங்கம் என்ற நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரு ட்ரெண்ட் செட்டர். அந்த மேடையை பயன்படுத்தி பலர் வெளிச்சத்திற்கு வந்தனர். அதேபாணியில் மக்கள் அரங்கம் என்ற நிகழ்ச்சியையும் அவர் நடத்தினார். ஒருவகையில் பார்த்தால், பலரது வெளிச்சத்திற்கு காரணமானவராக இருந்திருக்கிறார் விசு.

சம்சாரம் அது மின்சாரம்’
சம்சாரம் அது மின்சாரம்’

அவருக்குப் பிறகு நடுத்தர குடும்ப மக்களை ஈர்க்கும் வகையிலான இயக்குநர்களை விரலில் எண்ணிவிடலாம். அவர் எந்தத் துறையை எடுத்தாலும் அந்தத் துறையில் விசு ஸ்டைல் என்ற ஒன்றை உருவாக்கியிருந்தார்.

விசுவுக்குப் பிறகு கிட்டத்தட்ட எல்லா சேனல்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் வரத்தொடங்கினாலும் விசு அளவு ஆளுமையை நிரூபித்திருக்கிறார்களா? என்பது சந்தேகம். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எந்த ஏரியாவாக இருந்தாலும் விசு அதில் ஆகச்சிறந்த ஆளுமை.

இதையும் படிங்க: பிரபல நடிகர் தீப்பெட்டி கணேசன் மாரடைப்பால் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.