ஹைதராபாத்: டிஸ்னி ஓடிடி தளத்துடன் ‘தி எம்பயர்’ தொடருக்காக மீண்டும் கைகோர்க்கவுள்ளார் தயாரிப்பாளர் நிக்கில் அத்வானி. இத்தொடர் ஒரு சாகச அனுபவமாக இருக்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.
மிதக்ஷரா குமார் இயக்கவுள்ள இத்தொடர், ஒரு அரசனின் நீண்ட பயணத்தை விவரிக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவிலேயே இது ஒரு பிரமாண்ட தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கள் ஹோ நஹோ, டி - டே, பட்லா ஹவுஸ் ஆகிய படங்களை இயக்கிய நிக்கில் அத்வானி, நவம்பர் ஸ்டோரி, கிரஹன் ஆகிய தொடருக்காக டிஸ்னியுடன் பணியாற்றினார். தற்போது ‘தி எம்பயர்’ தொடருக்காக மீண்டும் இணைந்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இத்தொடர் குறித்து நிக்கில் அத்வானி, பிரமிக்க வைக்கும் ஒரு உலகை உருவாக்க வேண்டியதுதான் எங்கள் முன் இருக்கும் சவால். இத்தொடர் ரசிகர்கள் மீது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என உறுதியாக சொல்லமுடியும். மிதக்ஷரா குமாரை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாத்தியாரை நினைவுகூர்ந்த கமல்