ETV Bharat / sitara

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா: தட்றோம்... தூக்குறோம் திரைப்படம் தேர்வு! - Toranto film festival screening

நடிகர் டீஜேய் அருணாசலம் நடித்த 'தட்றோம்... தூக்குறோம்' திரைப்படம் டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தட்றோம்... தூக்குறோம்
தட்றோம்... தூக்குறோம்
author img

By

Published : Sep 10, 2020, 3:29 PM IST

'அசுரன்' படத்தில் தனுஷுக்கு மூத்த மகனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் டீஜேய் அருணாசலம். இவர் லண்டனைச் சேர்ந்த புகழ் பெற்ற பாடகரும் கூட. 'அசுரன்' படத்தைத் தொடர்ந்து டீஜேய் இயக்குநர் அருள் இயக்கத்தில் 'தட்றோம்... தூக்குறோம்' என்னும் புதிய படத்தில் நடித்தார். இப்படத்தை மீடியா மார்ஷல் தயாரித்தது. இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார்.

இந்த திரைப்படம் தற்போது டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மையப்படுத்தி தயாரிக்கபட்ட கற்பனை கலந்த படம்.

நாயகன் டீஜேய் அருகே பௌசி
நாயகன் டீஜேய் அருகே பௌசி

இந்த திரைப்படத்தில் அறிமுக கதாநாயகியாக பௌசி நடித்துள்ளார். மேலும், சீனு மோகன், காளி வெங்கட், லிங்கா, மாரிமுத்து, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலமுரளி பாலு இசையமைக்க சிலம்பரசன் படத்தின் மிக முக்கியமான பாடலான பணமதிப்பிழப்பு பாடலைப் பாடியுள்ளார். படம் தணிக்கை குழுவினரால் தணிக்கை செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே இணைய தளத்தில் வெளியிடப்பட்டு பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்துவிட்டது. கரோனா நெருக்கடிக்கு மத்தியில் டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தி படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தட்றோம்... தூக்குறோம் திரைப்படம் தேர்வு!

இந்த பட விழாவில் தேர்ந்தெடுத்ததற்கு டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழா குழுவினருக்கும், ஊடகத் துறைக்கும் நன்றி என மீடியா மார்ஷல் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. விரைவில் இத்திரைப்படம் தியேட்டர்களில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:'ஆட்சியா பண்றாங்க... அராஜகம் பண்றாங்க...' - 'தட்றோம் தூக்குறோம்' ட்ரெய்லர் சொல்லும் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.