'அழகி', 'சொல்ல மறந்த கதை', 'பள்ளிக்கூடம்', 'ஒன்பது ரூபாய் நோட்டு', 'களவாடிய பொழுதுகள்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் தங்கர்பச்சான். பார்த்திபன், சத்யராஜ், சேரன், பிரபுதேவா போன்ற நாயகர்களை மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
இவர், தற்பொழுது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் அவரது மகன் விஜித் பச்சானை நாயகனாக அறிமுகம் செய்யவுள்ளார். கிராமத்து பின்னணியில் அழுத்தமான படைப்புகளை உருவாக்கிய தங்கர்பச்சான் இப்படத்தை சென்னை நகரத்தை மையமாகக் கொண்ட நகைச்சுவைப் படமாக இயக்குகிறார்.
-
எனது இயக்கத்தில் கதாநாயகனாக என் மகனை அறிமுகம் செய்கிறேன்.அனைவரின் வாழ்த்துகளை எதிர் நோக்கி.#TMTT #PSNentertainment @vijithbachan @MilanaNagaraj @editorsabu @Ashwinichandr10 @dharankumar_c @immasterdinesh @silvastunt @gopiprasannaa @johnsoncinepro @DuraiKv pic.twitter.com/sDj0Zfb9mg
— தங்கர் பச்சான் (@thankarbachan) October 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">எனது இயக்கத்தில் கதாநாயகனாக என் மகனை அறிமுகம் செய்கிறேன்.அனைவரின் வாழ்த்துகளை எதிர் நோக்கி.#TMTT #PSNentertainment @vijithbachan @MilanaNagaraj @editorsabu @Ashwinichandr10 @dharankumar_c @immasterdinesh @silvastunt @gopiprasannaa @johnsoncinepro @DuraiKv pic.twitter.com/sDj0Zfb9mg
— தங்கர் பச்சான் (@thankarbachan) October 9, 2019எனது இயக்கத்தில் கதாநாயகனாக என் மகனை அறிமுகம் செய்கிறேன்.அனைவரின் வாழ்த்துகளை எதிர் நோக்கி.#TMTT #PSNentertainment @vijithbachan @MilanaNagaraj @editorsabu @Ashwinichandr10 @dharankumar_c @immasterdinesh @silvastunt @gopiprasannaa @johnsoncinepro @DuraiKv pic.twitter.com/sDj0Zfb9mg
— தங்கர் பச்சான் (@thankarbachan) October 9, 2019
இப்படத்தில் மிலனா நாகராஜ், அஸ்வினி என இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர். மேலும் இவர்களுடன் முனீஸ்காந்த், மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா மற்றும் யோகிராம் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தை பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கிறது. முழு படப்பிடிப்பும் சென்னையிலேயே தொடர்ந்து ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், படத்தின் தலைப்பை நாளை வெளியிடவுள்ளதாக தங்கர் பச்சான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிங்க: தமிழில் அறிவிப்பு செய்வது சலுகை இல்லை; உரிமை - தங்கர் பச்சான்