மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஏ.எல். விஜய் 'தலைவி' படத்தை இயக்கி வருகிறார்.
'தலைவி' படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், நடிகர் அரவிந்த் சுவாமி எம்ஜிஆர் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை ஷைலேஷ்.ஆர். சிங் மற்றும் விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் தயாரிக்கின்றனர். தமிழில் 'தலைவி' என்ற பெயரிலும், இந்தியில் ஜெயா என்ற பெயரிலும் இப்படம் உருவாகி வருகிறது.
வரும் ஜுன் மாதம் 26ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், இன்று (ஜனவரி 17) எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு அரவிந்த் சுவாமியின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தது.
எம்ஜிஆர் போன்ற தோற்றத்தில் அரவிந்த் சுவாமியின் இளமையான புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள நிலையில், படத்தின் டீஸரையும் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
-
With a lot of love and respect, here is my first look Teaser of Puratchi Thalaivar MGR.
— arvind swami (@thearvindswami) January 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
#Thalaivihttps://t.co/lYOMxHGUTp
">With a lot of love and respect, here is my first look Teaser of Puratchi Thalaivar MGR.
— arvind swami (@thearvindswami) January 17, 2020
#Thalaivihttps://t.co/lYOMxHGUTpWith a lot of love and respect, here is my first look Teaser of Puratchi Thalaivar MGR.
— arvind swami (@thearvindswami) January 17, 2020
#Thalaivihttps://t.co/lYOMxHGUTp
எம்ஜிஆர் நடித்த 'புதிய பூமி' படத்தில் இடம்பெற்ற 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' என்ற பாடல் காட்சிகளுடன் இந்த டீஸர் எம்ஜிஆர் காலத்தை கண்முன்னே கொண்டு வந்துள்ளது. எம்ஜிஆர் போன்று நடனமாடி அரவிந்த் சுவாமி அசத்தும் டீஸர் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.