ETV Bharat / sitara

விரைவில் தளபதியின் 'மாஸ்டர்' ட்ரெய்லர் - மாஸ்டர் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி

கரோனா அச்சுறுத்துலுக்குப் பிறகு நீண்ட நாள்களுக்குப் பின்னர் மாஸ் நடிகரான விஜய் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால், ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ட்ரெய்லர் வெளியிடப்படும் என தெரிகிறது.

Master Trailer release
மாஸ்டர் ட்ரெய்லர் ரிலீஸ்
author img

By

Published : Dec 30, 2020, 10:44 PM IST

சென்னை: தளபதி விஜய் - மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தின் டீஸர் கடந்த நவம்பர் மாதம் தீபாவளி நாளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. தற்போது வரை இதனை 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து படத்தின் தெலுங்கு பதிப்பு டீஸர் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள இந்தப் படம் பெங்கல் வெளியீடாக ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

பொங்கலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து மாஸ்டர் படத்தின் ட்ரெய்லரை விரைவில் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக படத் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்துலுக்குப் பிறகு நீண்ட நாள்களுக்குப் பின்னர் மாஸ் நடிகரான விஜய் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால், ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ட்ரெய்லர் வெளியிடப்படும் என தெரிகிறது.

இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் குஷி ஏற்படுத்தியதுடன், தற்போதிருந்து படம் தொடர்பாக விதவிதமான போஸ்டர்களுடன் புரோமோஷன் வெளியிட ரசிகர்கள் இறங்கியுள்ளனர்.

இந்தப் படத்தை மாநகரம், கைதி படப்புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

இதையும் படிங்க: சந்தானத்தின் ‘பாரீஸ் ஜெயராஜ்’ சிங்கிள் டிராக் நாளை வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.