நடிகர் விஜய், ‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ’தளபதி 66’ படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கவுள்ளதாகவும், தில் ராஜு இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் ஒன்லைனைக் கேட்டவுடன் விஜய்க்கு பிடித்துவிட்டதால் அவர் உடனே இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் விஜய்யின் 66ஆவது படத்தை ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த இரண்டு படங்கள் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ’தளபதி 66’ படத்தில் விஜய் இதுவரை வாங்காத அளவில் 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாகவும் பேசப்படுகிறது. ஆனால் இந்தச் செய்திகள் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாத நிலையில், விஜய் ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அப்டேட்டை நோக்கி காத்துள்ளனர்.
இதையும் படிங்க: தள்ளிப்போன தனுஷ் - செல்வராகவன் படப்பிடிப்பு... காரணம் இதுதான்!